×

சுண்டைக்காய் துவையல்

தேவையான பொருட்கள்

பிஞ்சான சுண்டைக்காய் – 1 கப்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 2
உப்பு – தேவைக்கு ஏற்ப
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்.

செய்முறை

வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், உளுந்தம்பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி சுண்டைக்காயை முழுதாக அப்படியே வதக்கவும். நன்றாக வதங்கியதும் அடுப்பை ஆப் செய்துவிடவும். பொடித்த பொடியுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றிப்பிறகு வதக்கிய சுண்டைக்காயைச் சேர்த்து உப்பு சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். துவாதசிக்கு படைப்பதற்கு ஏற்ற சுண்டைக்காய் துவையல் தயார்.

The post சுண்டைக்காய் துவையல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பருப்பு ரசம்